உள்நாடு

பூஸ்டர் செலுத்தியோருக்கு மாத்திரமே கச்ச தீவு செல்ல அனுமதி

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கச்சதீவு தூய அந்தோனியார் ஆலய அருட்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்தார்.

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,கொரோனா நிலைமை காரணமாக இந்திய பக்தர்களுக்கு இம்முறையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டுமே கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருவிழாவில் பங்கேற்கும் அனைவரும் பூஸ்டர் டோஸையும் பெற்றிருக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கச்சதீவு திருவிழா தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் – வடிவேல் சுரேஷ்

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமனம்

editor

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 597 பேர் குணம்