உள்நாடு

UPDATE – பேரூந்து விபத்தில் ஒருவர் பலி 16 பேர் காயம்

(UTV |  நுவரெலியா) – ஹட்டன்-டிக்கோயா வீதியினூடாகப் பயணித்த தனியார் பேரூந்து ஒன்று விபதிற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (28) காலை 6.30 மணியளவில் வீதியை விட்டு விலகி குறித்த பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு வீதியை விட்டு விலகி 45 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த பேரூந்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

பூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு கொரோனா