உள்நாடு

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கு மே மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய அமில பிரியங்கர எனும் இளைஞர் டிப்பென்டர் வாகனமொன்றில் தடுத்து வைக்கப்பட்டு தாக்குதலுக்குட்பட்டதாக ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் அமல் ரணராஜா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்கமைய குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகள் மார்ச் மாதம் 23ம் திகதி ஆரம்பிக்கப்படும்.

அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றில் ஆஜராகுவது தொடர்பில் அறிவித்தலை வெளியிடுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

Related posts

இந்திய கடிதம் குறித்து – சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்

அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை – நாமல்

editor