(UTV | கொழும்பு) – டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் 14 வீடுகளை கொண்ட தொடர் லயன்குடியிருப்பிலுள்ள வீடொன்றில் இன்று(24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலினால் குறித்த வீட்டிலிருந்த வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள் என பெருமளவிலான பொருட்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த ஐவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை இது தொடர்பாக டயகம பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.