(UTV | கொழும்பு) – பத்து இலட்சம் மெட்ரிக் டொன் அரிசித் தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் குறித்த அரிசித் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.