உள்நாடு

இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்கும் – ஐ.நா

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த வருடத்தில் இலங்கை பாரிய பல சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்றவை பெரும் பிரச்சினையை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் உலக பொருளாதார நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரம் தொடர்பான அமைப்பின் அறிக்கையில் சர்வதேசம் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை பாரிய அளவில் உள்ள போதிலும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மத்திய வங்கிகள் கடந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் வட்டி விகிதத்தை அதிகரித்தன.

இதன் காரணமாக நிதி மற்றும் விலைகளின் ஸ்திரத்தன்மையினை பேணுவது கடினமான விடயமாக இந்த நாடுகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியினை 64 சத வீதமான இலங்கை, பூட்டான் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பெற்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற தேர்தலில் இருந்து விலகிய அஜித் மான்னப்பெரும

editor

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம்

‘நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மிகவும் முக்கிய காரணங்களில் ஒன்றுதான் இனவாதம்’