உள்நாடு

மீரிகம- குருநாகல் நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதி

(UTV | கொழும்பு) – மத்திய நெடுஞ்சாலையில், மீரிகம- குருநாகல் வரையிலான பகுதியில், எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு-குருநாகல் மற்றும் கொழும்பு- கண்டி வாகனங்கள் பயணிப்பதற்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவத்துள்ளது.

இதேவேளை, மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், குருநாகல் முதல் மீரிகம வரையான பகுதிக்குள், இன்று (16) மதியம் 12:00 மணி வரை இலவசமாக பயணிக்க சாரதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் தொடர்பான தகவல்களையும் நெடுஞ்சாலை அமைச்சு வெளியிட்டுள்ளது.

இலகு ரக வாகனங்களுக்கு : ரூ.250
கனரக வாகனங்களுக்கு :− ரூ.350 − ரூ.550

Related posts

யாருக்கு ஆதரவு? – நாளை இறுதித் தீர்மானம்

51% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

editor

பிறப்புச் சான்றிதழ் நகல்களின் செல்லுபடியாகும் காலம் குறித்த புதிய தீர்மானம்