உள்நாடு

விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டவர் கைது

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA)வெளிநாட்டவர் ஒருவர் தப்பித்துச் செல்ல முற்பட்ட நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் இலங்கை விமானப்படை கொமாண்டோக்கள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வெளிநாட்டவர் போலி கடவுசீட்டு மூலம் அபுதாபி ஊடாக பிரான்ஸின் பாரிஸிற்கு செல்ல முயற்சித்துள்ளார். எனினும் அவர் எந்த நாட்டவர் என அடையாளம் காணப்படாத வெளிநாட்டவராகும்.

அவர் கட்டுநாயக்க விமான குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்த போது திடீரென விமான நிலையத்தில் தப்பியோடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பின்னர் அவர் விமான நிலையத்தின் கூரை மீது ஏறி வெளியே ஒடும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

திருகோணமலையில் நிலநடுக்கம்!

தனது சேவை இனி தேவையில்லை – அரசியலில் இருந்து ஓய்வு – மஹிந்தானந்த

editor

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் களமிறங்கியே தீருவார்- மொட்டு அமைச்சர்