உள்நாடு

‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’

(UTV | கொழும்பு) – கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் திட்டம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்தியாவும் வரவேற்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இந்த கடினமான காலங்களில்” இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றார்.

“இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸூக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஜெய்சங்கர், நம்பகமான நண்பரான இந்தியா இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்” என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

Related posts

முகக்கவசம் இன்றேல் PCR பரிசோதனை

மேலும் ஒருவர் பூரண குணம்; குணமடைந்தோர் 56

ஷானி – அநுர தனித்தனியாக ரீட் மனுத்தாக்கல்