உள்நாடு

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV | கொழும்பு) – திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று(06) கைச்சாத்திடப்பட்டது.

திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், கனியவள கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில், நேற்று மாலை இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில, இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 99 எண்ணெய் குதங்களில், 85 குதங்கள் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தை, எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்க உள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, கனியவள கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய் [VIDEO]

“தமிழர்களுக்கு எதிராக வன்கொடுமை தொடருகிறது”

மேல்மாகாணத்திலிருந்து வௌியேற முற்பட்ட 5 பேருக்கு கொவிட்