உள்நாடு

நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மின் விநியோகத் தடை

(UTV | கொழும்பு) – களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க முடியாத காரணத்தால், இடைக்கிடையே நாடளாவிய ரீதியில் இன்று(07) மின்சார விநியோகத்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்றிரவு நாட்டின் சில பாகங்களில் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டது.

இந்நிலையில், செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைப்பதற்கான பணிகள் நேற்றிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க காலதாமதம் ஏற்படுமென்பதால் இன்றும் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டைக் கட்டியெழுப்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

மைத்திரிபால, CID யிடம் வாக்குமூலம் வழங்கியது பற்றி விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு..

மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்