(UTV | கொழும்பு) – வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (08) காலை 08 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (09) நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மாநகர சபை, தெஹிவளை – கல்கிசை மாநகர சபை, கோட்டே மாநகர சபை, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை – முல்லேரியா ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.