உள்நாடு

விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தல்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று தடுப்புக்கான தடுப்பூசியின் 2ஆவது தடுப்பூசியை பெற்று 3 மாதங்கள் கடந்திருந்தால் விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவு பொது மக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான பைசர் மருந்து தற்பொழுது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ,சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக வருகைத்தரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக குறிப்பிட்டடார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!

இன்று முதல் சட்டப்படி வேலை

ஓய்வூதிய வயது தொடர்பில் தெளிவுபடுத்துதல்