(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரைகள் மற்றும் பிற செயல்பாடுகளை நடத்த பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் உட்பட எந்தவொரு தேவைக்கும் மாணவர்களை அழைக்கலாம் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.