உள்நாடு

கட்டண திருத்தம் குறித்து பஸ் தொழிற்சங்கங்களுக்கு அறிவித்தல் வழங்கப்படவில்லை

(UTV | கொழும்பு) – 8 சதவீத பஸ் கட்டண திருத்தம் மற்றும் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 2 ரூபாயினால் திருத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு எடுத்த தீர்மானம் தமக்கு துளியும் திருப்தியளிக்கவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கட்டண திருத்தம் தொடர்பில் பஸ் தொழிற்சங்கங்களுக்கு எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும் விஜேரத்ன கூறியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு, பஸ் உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு, உராய்வு எண்ணெய் விலை அதிகரிப்பு, சேவைக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பஸ் உரிமையாளர்களுக்கு சலுகைத் திட்டத்தை உருவாக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

உங்களுக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வந்ததா?

மோட்டார் வாகனம் – ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!