விளையாட்டு

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு

(UTV |  மும்பை) – இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஹர்பஜன் சிங், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்த நிலையில் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளளார். 41 வயதாகும் ஹர்பஜன் சிங் 1998-ம் அண்டு மார்ச் 25ம் திகதி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 முதல் 15ம் திகதி வரை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

1998-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2015-ம் ஆண்டு வரை விளையாடினர். 2006 முதல் 2016 வரை டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டும், 236 ஒருநாள் போட்டியில் விளையாடி 269 விக்கெட்டும், 28 டி20 போட்டியில் விளையாடி 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

Related posts

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!

இலங்கை அணி 144 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடுமா?

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று