உள்நாடு

அரசு கண்டுகொள்ளவில்லை : பணிப்புறக்கணிப்பு தொடரும்

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காமையால் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணிமுதல் நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்தது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமை உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற மத்தியக் குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

Related posts

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்.

editor

பிரதமர் ஹரிணியின் நடவடிக்கையை கண்டிக்கிறோம் – நிமல்கா பெர்னாண்டோ

editor