(UTV | கொழும்பு) – தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லையென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடன் அல்லாத வரவு, ஏற்றுமதி வருமானம் மற்றும் பணம் அனுப்புதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் அவை தற்போதைய தேவைகளைச் சமாளிக்க போதுமானதாக இருக்கும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.