உள்நாடு

காணாமற்போயுள்ள இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் கோரிக்கை

(UTV | கொழும்பு) – காணாமற்போயுள்ள கொட்டதெனியாவ – பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.

10 மற்றும் 12 வயதான இரு சிறுவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல்போயுள்ள சிறுவர்களின் விபரங்கள் பின்வருமாறு:

பெயர் : திசாநாயக்க முதியன்சேலாகே சந்தகெலும்
வயது : 10

பெயர் : ஜயசேகர முதலிகே அகில தேதுணு
வயது : 12

குறித்த சிறுவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொட்டதெனியாவ பொலிஸ் நிலையம் – 071 8591634, 033 2240050, 033 2272222

Related posts

ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்கவும் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிவிப்பு

தங்கத்தின் விலை வீழ்ச்சி

கடந்த 24 மணி நேரத்தில் 557 தொற்றாளர்கள் : மூவர் பலி