(UTV | கொழும்பு) – இந்நாட்டின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்காக வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் தின விசேட சந்திப்பு மற்றும் இரவு விருந்துபசார நிகழ்வு நேற்று (12) இரவு கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
நத்தார் தினத்தை முன்னிட்டு இவ்விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட தூதுவர்கள் தற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட இராஜதந்திர சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கௌரவ பிரதமர் கலந்துரையாடினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கௌரவ அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பவித்ராதேவி வன்னிஆராச்சி, அலி சப்ரி, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், தாரக பாலசூரிய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, சுரேன் ராகவன் மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.