உள்நாடு

பால்மா தட்டுப்பாட்டுக்கு அரசிடம் தீர்வு இல்லை

(UTV | கொழும்பு) – நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் பால்மா விற்பனைக்கு இல்லையென நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாட்டுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டு நாணய கையிருப்பு பற்றாக்குறையால், பால்மாவுக்குப் பதிலாக ஏனைய அத்தியாவசிய பொருட்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து 28 பேர் குணமடைந்தனர்

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு

இன்றைய தினம் மேலும் பலருக்கு கொவிட் உறுதி