(UTV | கொழும்பு) – இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.
1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி, 1950 – 34 ஆம் இலக்க கடற்படைச் சட்டத்தினூடாக ரோயல் சிலோன் கடற்படை என்ற பெயரில் நிரந்தர கடற்படை உருவாக்கப்பட்டது.
1972 புதிய அரசியலமைப்பின் பிரகாரம் ரோயல் சிலோன் கடற்படை, ‘இலங்கை கடற்படை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நாட்டின் கடற்பிராந்தியத்தைப் பாதுகாக்கும் தேசிய அபிலாஷையை நிறைவேற்றுவது தொடக்கம் கடல் எல்லையில் கடற்படை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அளப்பரியவை.
கடல் வழியாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்தல், அனர்த்தத்திற்கு உள்ளாகும் கடற்றொழிலாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு உதவிகளை வழங்குதல் என்பன கடற்படையினர் முன்னெடுக்கும் விசேட நடவடிக்கைகள் ஆகும்.