உள்நாடு

டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு முதலிடம்

(UTV | கொழும்பு) – நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 1-0 என வென்று ஐ.சி.சி. ஆடவர் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி திங்கட்கிழமை மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி,சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களையும், விராட் கோலி தலைமையில் 11 தொடர்களையும் வென்றுள்ளனர்.

நியூசிலாந்து முன்னதாக கடந்த வாரம் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை சமனிலையில் முடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Related posts

ஆறுமுகன் தொண்டமான் இன்று விடுதலை

வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

மேலும் 171 பேர் பூரண குணம்