உள்நாடு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியில்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“.. எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளாவிடின் எரிபொருளுக்கான வரியை குறைக்குமாறு நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

உலக சந்தையில் எரிபொருள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கபடாத காரணத்தினாலும், ஏனைய காரணிகளினாலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்த 10 மாத காலத்திற்குள் மத்திரம் 7000 ஆயிரம் கோடி நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது.

அத்துடன் இலங்கை வங்கிக்கும், மக்கள் வங்கிக்கும் சுமார் 400 கோடி வரையில் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

தற்போது அக்கடன் தொகை பகுதி பகுதியாக செலுத்தப்பட்டு வருகின்றது. பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை நிவாரண விலைக்கு விநியோகிக்கப்படும் நிலையில்,எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும்..” என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Related posts

தாமரைக் கோபுரத்திற்கு சேதம்விளைவித்த நபர்கள் கைது!

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

கண்டி எசல பெரஹராவுக்கான முகூர்த்த்கால் நடும் விழா இன்று