(UTV | கொழும்பு) – வீதி விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தார் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கு தற்போது வழங்கப்படும் நட்ட ஈட்டுத்தொகையை 50,000 ரூபாவால் அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தாருக்கு இதுவரை வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை இரண்டரை இலட்சம் ரூபாயாக செலுத்தப்படுமென அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைவோருக்கு வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாயட நட்ட ஈட்டை ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.