கிசு கிசு

ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கைக்கு உள்நுழைந்துள்ளதா?

(UTV | கொழும்பு) –  ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கைக்கு உள்நுழைந்துள்ளதா என்பது தொடர்பில் உறுதியான அறிக்கையை வெளியிட முடியாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு குறித்த வைரஸ் பிறழ்வு பரவுவது தாமதமாகலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

“ஒமிக்ரோன் குறித்து உறுதியாக எமக்கு கூற முடியாது. ஏனெனில் அது குறித்த தகவல்கள் எம்மிடம் இல்லை.. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரோன் பரவியுள்ளதனை வைத்து, இலங்கையில் இதுவரையில் ஒமிக்ரோன் உள்நுழையவில்லை என்பதை எமக்கு ஊகிக்க முடியுமே தவிர உறுதியாக கூற முடியாது. ஆனால் தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவிலான மக்கள் நேரடியாக இலங்கைக்கு வருவதில்லை. அதனால் தொற்று உள்நுழைவதில் தாமதமாகலாம். நாங்கள் ஒரு மாதிரியை எடுத்து, அதை மட்டுமே பகுப்பாய்வு செய்கிறோம். அந்த புதிய பிறழ்வினை நாம் எவ்வளவு அதிகமாகப் அடையாளம் காணுகிறோமோ அவ்வளவுக்கு இந்த மாறுபாடு பரவுவதைக் குறைக்கலாம் ”

Related posts

சமந்தா நடிக்க கணவர் தடையா?

மேகன் மெர்க்கல் கர்ப்பம்…

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்