உள்நாடு

கோதுமை மா விலை அதிகரிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (29) எடுக்கப்படவுள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையில் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

அதேநேரம் இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினாலும், ஏனைய சிறிய உணவு வகைகளின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்திருந்தார்.

Related posts

ஹம்திக்கு நடந்தது என்ன? விரிவாக பேசுகிறார் மனித உரிமை ஆர்வலர்!

கொரோனா தடுப்பூசி : இந்தியாவின் சீரம் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் போக்குவரத்தில் மற்றம்