உள்நாடு

பூஸ்டர் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனை

(UTV | கொழும்பு) – இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று 03 மாதங்கள் பூர்த்தியான 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நடமாடும் சேவை மூலம் மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று ஒரு மாதம் பூர்த்தியான 20 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்துமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

149 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!

கடத்தப்பட்ட கார் மீட்கப்பட்டது