உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலைகளில் LANKA QR முறையின் ஊடாக கட்டணம் அறவிட அனுமதி

(UTV | கொழும்பு) – LANKA QR கட்டண முறையினூடாக அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

திரவப்பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, இந்தக் கட்டண முறை எதிர்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண அறவீட்டு நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கைப்பேசிகளில் குறித்த தொகையயை உள்ளிட்டு எந்தவொரு வங்கியினதும் LANKA QR செயலியின் ஊடாக, நுழைவாயிலில் காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண முறைமையை அமுலாக்குவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இரத்து செய்யப்பட்ட கட்சி தலைவர்களுக்கான கூட்டம்

மஹிந்த இன்று SLPP உறுப்பினர்களை சந்திக்கிறார்