உள்நாடு

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றிய விருது விழா : UTV ஊடகவியலாளர் இருவருக்கு விருதுகள்

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியத்தின் வருட பூர்த்தி விழா கொழும்பு – 13 கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் நேற்று(14) மாலை நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் UTV ஊடகவியலாளர்களான ஏ.எம்.ஜூசைர் மற்றும் நிவேதா ஜெகநாதன் ஆகியோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No description available.UTV ஊடகவியலாளரான ஏ.எம்.ஜுசைர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட போது;
UTV ஊடகவியலாளரான ஏ.எம்.ஜுசைர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட போது;
UTV ஊடகவியலாளரான நிவேதா ஜெகநாதன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட போது;
UTV ஊடகவியலாளரான நிவேதா ஜெகநாதன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட போது;

கலைஞர்கள் ஊடகவியவாளர்கள் என பலர் இதன் போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியத்தின் தலைவர் விஜயராஜ் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம் உமர் மற்றும் தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவை அலங்கரிக்கும் வகையில் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில்

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு நான்கு சங்கங்கள் ஆதரவு.

editor