உள்நாடு

பல்கலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை(11) முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாக உள்ளது.

இது தொடர்ந்தும் 12 மற்றும் 15ம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளது.

நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் தடுப்பூசி செலுத்தப்படும் தினங்களில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை யாழ்ப்பான பல்கலைக்கழக சுகநல நிலையத்தில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

ஒக்ரோபர் மாதம் சினோபாம் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசி ஏற்ற வரும் போது தடுப்பூசி அட்டை ,தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 646 கைது

10 புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!

பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு