உள்நாடு

அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றில்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (12) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும் இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இம்முறை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 5,134 பில்லியன் ரூபாவாகும்.

இதில் 1,521 பில்லியன் ரூபாவை, கடனை மீளச் செலுத்துவதற்கு செலவிடப்படவுள்ளதாக பாராளுமன்றத்தில் தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 980.2 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இந்தப் வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது.

Related posts

கடூழிய சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் மனு தாக்கல்

editor

கருணாவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை