உள்நாடு

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் சிறப்பு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற கோவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களின் வாசஸ்தலமாகிய அலரி மாளிகையில், பிரதமர் தலைமையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற நிகழ்ந்தேறியது.

சிறப்புமிகு இந்த நிகழ்வினை, இலங்கைத் திருநாட்டின் பிரதமரின் பாரியார், கௌரவ சிராந்தி ராஜபக்ச அம்மையார் அவர்கள் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை நிகழ்வினைக் கொண்டாடி மகிழும் வகையில் கௌரவ பிரதமர் மற்றும் அவரது பாரியார் அவர்களால் இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்புப் பட்சணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்,நிகழ்வின் விசேட அம்சமாக , இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சுபீட்சமானதொரு எதிர் காலம் நோக்கிய பயணத்திற்கு, துணை செய்யும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற புதிய பாடத்திட்ட நடைமுறைக்கு அமைவாக வெளிடப்பட்ட இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியன, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களால் நிகழ்விலே கலந்துகொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைத் திருநாட்டின் சமய சக வாழ்விற்கான ஒரு அடையாளமாக இச் சிறப்பு மிகு நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

   

Related posts

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

முன்னாள் இராணுவ அதிகாரி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம்