(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை இன்று (01) ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
முதற்கட்டமாகச் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
தொடர்ந்து, இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
தற்போது 2 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில், தட்டுப்பாடின்றி தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனச் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.