(UTV | கொழும்பு) – உலகக்கிண்ண இருபதுக்கு20 தொடரின் 25ஆவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக பெத்தும் நிஸங்க 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் டப்ரைஸ் ஷம்சி 17 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 143 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக தேம்பா பாவுமா 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 20 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர 27 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.