உள்நாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) –  நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் மேகமூட்டமான காலநிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவு மக்களுடன் முன்னாள் அமைச்சர் றிஷாட் கலந்துரையாடல்

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல்

பரசிடமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்