உள்நாடு

நிதியமைச்சின் நிராகரிப்பு வெற்றியளிக்குமா

(UTV | கொழும்பு) – எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவேண்டு​மென எரிசக்தி அமைச்சு விடுத்த வேண்டுகோளை நிதியமைச்சு நிராகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விலைகளை அதிகரிக்காவிட்டால் அதிகாரிகள் வேறு வகையான தீர்வொன்றை முன்வைப்பார்கள் என நம்புவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் ஈடுசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த நால்வர் கைது

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவை நியமனம்!