(UTV | கொழும்பு) – கடந்த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக சேர்க்கைக்காக 105,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 44,000 என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.