உள்நாடுவணிகம்

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லீற்றர் பாலுக்கான விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றமை போதுமானதாக இல்லையென பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சுசந்த குமார நவரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் ஒரு லீற்றர் பாலின் விலை 120 ரூபாவரை அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து வெவ்வேறு பகுதிகளில் மாறுபட்ட விலைகளில் பால் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நாடு முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

10 ஏக்கர் காணி எரிந்து நாசம்!

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

சீனாவில் உள்ள “வெள்ளை குதிரை” விகாரை இலங்கை விகாரை மண்டபத்தில் நிர்மாணிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு.