உலகம்

சிட்னி செல்லும் வெளிநாட்டினர் குறித்து ஆஸியின் நிலைப்பாடு

(UTV | அவுஸ்திரேலியா) –  அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலம், அடுத்த மாதம் முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலகப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறக்கவிருக்கிறது.

இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சென்றடையும்போது தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையிருக்காது.

ஆனால், நாடு திரும்பும் அவுஸ்திரேலியர்களும் அனைத்துலகப் பயணிகளும் பயணத்தைத் தொடங்கும் முன்னர், தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதை நிரூபிக்கப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

அவுஸ்திரேலியா உலகில் தொடர்ந்து தனித்து வாழ முடியாது என நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் டோமினிக் பேர்ரோட்டே (Dominic Perrottet) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“காஸாவிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு”

கொரோனாவுக்கு மத்தியில் ‘மோலேவ்’ புயல் – 9 பேர் பலி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்தது