உள்நாடு

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வேண்டும்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் சம்பள பிரச்சினைக்கு தௌிவான தீர்மானமொன்றை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

அவ்வாறு தீர்வு வழங்காவிடின் தங்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரை இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

புதையல் தோண்டிய ஐவர் கைது

“மெயின் ஷிஃப் 5” என்ற அதிசொகுசு கப்பலின் இலங்கை வருகை

தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்