கேளிக்கை

பதினொரு கோடி பேரால் பார்க்கப்பட்ட நெட்பிளிக்ஸ் சீரிஸ்

(UTV | கொழும்பு) –   கொரியன் வெப் சீரிஸான ஸ்கிவிட் கேம்ஸ் வெளியாகி சில வாரங்களுக்குள்ளாகவே உலக அளவில் கவனம் ஈர்த்தது.

கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் 10 தினங்களுக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த தொடர் குறித்து பேசியுள்ள நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார்
.
இந்நிலையில் வெளியானதில் இருந்து இப்போது வரை 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். ஆங்கில சீரிஸ்களுக்கு இணையாக இதன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Related posts

சுஷாந்த் வீட்டில் மற்றுமொரு மரணம்

தீயாக பரவிய அனுஷ்காவின் செய்தி…

காஷ்மீர் தாக்குதல்: கோழைத்தனமான தாக்குதல்-கோலிவுட் திரையுலகினர் கண்டனம்