உள்நாடு

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்

(UTV | கொழும்பு) – 2021 ஒக்டோபர் 07ம் திகதி, திருகோணமலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சர்வேதேச சிறுவர் தின தேசிய நிகழ்வுகள் -2021 விழாவில், பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமத் அவர்கள் அறுபது கணனிகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் பாடசாலை புத்தக பைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, முன் பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலைகள் உள்கட்டமைப்பு மற்றும் பாடசாலைகள் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா அவர்களிடம் வழங்கி வைத்தார்.

இவ்விழாவில் பதில் உயர் ஸ்தானிகர் உரையாற்றுகையில்; பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவானது பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் பரஸ்பர நட்புறவு ஆகியவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும் மேலும் இரு நாட்டு உறவானது எந்தவித நிர்பந்தங்களிலிருந்தும் அப்பாற்பட்டு சுயாதீனமானதாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் எனவும் கொவிட் 19 தொற்று காலப்பகுதியில், பாகிஸ்தான் அரசாங்கத்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட கணனிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தகுதியான மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பு செய்தமைக்காக பதில் உயர்ஸ்தானிகர் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

********************

கொழும்பு
11-10-2021

Related posts

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் : இன்றும் விசாரணைக்கு

டீசல் தட்டுப்பாடு, பேரூந்து சேவைகள் மட்டு

மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர்