உள்நாடு

PANDORA PAPERS : இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

(UTV | கொழும்பு) –   ‘பெண்டோரா பேப்பர்ஸ்’ (Pandora Papers)என்ற பெயரில் வெளியான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும், குறித்த கொடுக்கல் வாங்கல் குறித்தும் விசாரணை செய்ய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் இலஞ்ச ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பெண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கையூட்டல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உத்தரவிட்டார்.

பெண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் அண்மையில் வெளியான, உலகில் உள்ள பெரும்புள்ளிகள் உள்ளிட்ட பலரின் மறைமுக சொத்துகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள், உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், குறித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு ஒரு மாதத்துக்குள் அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ட்விட்டர் பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்தார்.

Related posts

வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

editor

ரதன தேரர் CID முன்னிலையில்

பங்களாதேஷ் கலவரம் – இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை.