உள்நாடு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2022 – இன்று நாடாளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –  2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (07) முன்வைக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது.

அரசாங்கம் புனரமைப்புக்காக – 1,776 பில்லியன் ரூபா

இந்த வருடத்திற்கான செலவீனமான 2,538 பில்லியன் ரூபாவை காட்டிலும் அடுத்த வருடத்தின் செலவீனமானது 33 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுச் சேவைகளுக்காக – 12.6 பில்லியன் ரூபா

அடுத்த வருட ஜனாதிபதியின் செலவீனமானது – 2.78 பில்லியன் ரூபா

இந்த வருடத்தில் பாதுகாப்புத்துறைக்கு 355 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டிருந்த நிலையில், அது அடுத்த வருடத்தில் 18 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சுகாதார துறைக்காக 153.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 பில்லியன் ரூபாவினால் அது குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாணக்கியன் எம்.பியின் அலுவலகத்தில் முற்றுகை-100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம்.

ஓடும் பஸ்ஸில் பெண்ணின் தலை முடியை வெட்டிய ஒருவர் கைது – கண்டியில் சம்பவம்.

மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் அனுதாபப் பிரேரணை