உள்நாடு

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி

(UTV | கொழும்பு) –  வெகுசன ஊடகத்துறையில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியான கற்கைகளின் தரநியமங்களுக்கமைய வெகுசன ஊடகக் கல்வி மேம்பாடு மற்றும் உயர் தரநியமங்களைப் பாதுகாப்பதற்காகவும், அரச அனுசரணையுடன் கூடிய நிறுவனமொன்றை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாடசாலைகளில் வெகுசன ஊடகவியல் தொடர்பான பாடவிதானத்தைப் பயில்கின்ற குறிப்பிடத்தக்களவிலான மாணவர்கள் இருக்கின்ற போதிலும், அவர்களுக்கான உயர்ந்த தரநியமங்களுடன் கூடிய போதுமானளவு கற்கை நிறுவனங்கள் இதுவரை தாபிக்கப்படவில்லை.

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் வெகுசன தொடர்பாடல் பட்டப்படிப்புக் கற்கைகள் சில காணப்பட்டாலும், குறித்த கற்கைகள் மூலம் தொழில்வாண்மை ரீதியான ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்குப் போதியவாறான பிரயோக ரீதியானதும் தொழிநுட்ப ரீதியானதுமான அறிவு வழங்கப்படுவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால், தற்போது வெகுசன ஊடகத்துறையில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கும், ஊடக முகாமையாளர்களுக்கும் அதேபோல் ஊடகத்துறையில் பிரவேசிப்பதற்கு எதிர்பார்க்கும் பாடசாலை மாணவர்களுக்கும் வெகுசனத் தொடர்பாடல் பாடவிதானத்தை கற்பதற்கும், தேவையான பிரயோக ரீதியான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அவர்களுடைய இயலளவு விருத்தியை ஏற்படுத்தி தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கும், விழுமியம்மிக்க சுயகட்டுப்பாட்டுடன் கூடிய ஊடகக் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஊடகவியலாளர்களை உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு, வெகுசன ஊடகவியல் தொடர்பான சான்றிதழ் பாடநெறி தொடக்கம் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பு வரைக்குமான கற்கை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இயலுமான வகையில் வெகுசன உயர்கல்விக் கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனமாக ‘இலங்கை வெகுசன ஊடகவியல் பட்டயக்கற்கைகள் நிறுவனம்’ எனும் பெயரிலான நிறுவனமொன்றை தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

ஆசிரியர், அதிபர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

பயிற்றுவிக்கப்படாத இலங்கை இமாம்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாக்கத்தினர் : யூஸுப் முப்தியின் அறிவிப்பு

கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு