(UTV | கொழும்பு) – உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பென்டோரா பேப்பர்ஸ்’ குறித்து உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பது அவசியம் என ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் இலங்கை நிறுவனம் கோரியுள்ளது.
குறித்த ஆவணங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில், இலங்கையின் அரச சொத்துக்கள் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்றே அந்நிறுவனம் கேட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சுயாதீன விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அந்நிறுவனம் கோரியுள்ளது.
அத்துடன், குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் குறித்து நடத்தப்படும் விசாரணைக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படாமல், விசாரணைகளை நடத்த இடமளிக்குமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது.
உலக அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வர்ர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல் பட்டியலான ‘பென்டோரா பேப்பர்ஸ்’ இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான பிரபல வர்த்தகர் திருக்குமார் நடேசன் ஆகியோரது பெயரும்
உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.