கிசு கிசு

இராஜினாமா பட்டியலில் ‘தயாசிறி’

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரும்பினால் மீண்டும் ஒரு தடவை வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் தற்போதும் இது சார்ந்த பல கோரிக்கை தமக்கு முன்பாக கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தயாசிறி ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு வடமேல் மாகாண முதலமைச்சராக போட்டியிட்டுத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிம்முடன் காதலில் விழுந்த டிரம்ப்…

விலங்குகளையும் விட்டு வைக்காத ‘கொரோனா’

RCB-யை கலாய்த்து சிவகார்த்திகேயன் எடுத்த படம்?