உள்நாடு

நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து அஜித் நிவாட் கப்ரால் விலக தீர்மானம்

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு, புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு, அமைச்சரவை அமைச்சரின் அதிகாரம் கிடைக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதால் வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு தெரிவு செய்யப்படும் நபர் தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேநேரம், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநராக பதவி வகிக்கும் பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன், எதிர்வரும் செவ்வாய்கிழமை அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்

ஐ.தே.கட்சியினால் கோரிக்கை கடிதம்