உள்நாடு

ஒட்சிசன் தேவையுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – மருத்துவ ஒட்சிசன் வாயு தேவையேற்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பார்த்ததை போன்று கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ ஒட்சிசன் வாயு தேவையேற்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை ஒப்பிட்டளவில் குறைவடைந்துள்ளது.

எந்தவொரு நோயாளர்களும் மருத்துவ ஒட்சிசன் வாயு கிடைக்கப்பெறாமல் அசௌகரியத்திற்கு முகங்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு இடமளிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

எமது ஆட்சிக் காலத்தில் நாம் மக்களைக் கைவிடவில்லை – நாமல் ராஜபக்‌ஷ எம்.பி

editor

மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞர் பலி

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்

editor